சீன போர் விமானங்களின் மிரட்டலையும் மீறி தைவான் சென்றார் பெலோசி: ரேடார் தொடர்புகளை துண்டித்தது அமெரிக்கா

தைபே: சீனாவின் கடும் அச்சுறுத்தலுக்கு இடையே அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானில் கால் பதித்தார். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தனது ஆசிய பயணத்தை கடந்த 30ம் தேதி உறுதி செய்தார். அதன்படி, அவர் தனது குழுவினருடன் நேற்று அதிகாலை சிங்கப்பூர் வந்தார். அங்கிருந்து மலேசியா சென்றார். தொடர்ந்து, தைவான் நோக்கி அமெரிக்க ராணுவ விமானத்தில் தனது பயணத்தை தொடர்ந்தார். ‘பெலோசி தைவான் சென்றால், சீன ராணுவம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது. கடுமையான பின்விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்,’ என்று சீன எச்சரித்தது. இதனால், பெலோசியின் தைவான் பயணம் பரபரப்பும், பதற்றமும் நிறைந்ததாக இருந்தது.

பெலோசி தைவானை நோக்கி விமானத்தில் சென்ற அதே நேரம், சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் தைவான் எல்லையில் சுற்றி வந்து அச்சுறுத்தியது. மேலும், ராணுவ கவச வாகனங்கள் தைவான் எல்லை நோக்கி நகர்ந்தன. இதனால், பெலோசி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். சீனா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்கு அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருந்தது. இதனால், உலகளவில் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில், நேற்றிரவு தைவானின் தலைநகரமான தைபேயில் பெலோசியின் விமானம் தரையிறங்கியது. இதன் மூலம், 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் தைவானில் கால் பதித்த வரலாற்றை பெலோசி படைத்துள்ளார். பெலோசியின் விமானம் தைவானை நோக்கி பறந்து கொண்டிருந்த நேரத்தில், அந்த விமானத்தை யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், மொத்த ரேடார் இணைப்புகளையும் அமெரிக்க தொழில்நுட்ப பிரிவினர் துண்டித்தனர். இதனால் சீன போர் விமானங்கள் திகைத்து விட்டன. பெலோசியும் சவால் விட்டப்படி தைவான் சென்று விட்டார்.

Related Stories: