மேற்கு வங்க மாநில அமைச்சரவையை கூண்டோடு மாற்ற மம்தா அதிரடி முடிவு: புதிய அமைச்சர்கள் நாளை பதவி ஏற்பு?..

கொல்கத்தா; மேற்கு வங்க மாநில அமைச்சரவையை கூண்டோடு களைத்து புதிய அமைச்சரவையை உருவாக்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். புதிய அமைச்சர்கள்  நாளை பதவி ஏற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிகின்றன. மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் மரணம் மற்றும் மற்றோரு மூத்த அமைச்சரான பார்த்தா சட்டர்ஜி ஊழல் வழக்கில் கைதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கையை மம்தா மேற்கொண்டுள்ளார். நாளை பதவி ஏற்க உள்ள புதிய அமைச்சரவையில் சில அமைச்சரகள் வெளியேற்றப்பட்டு ஐந்து அல்லது ஆறு புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்க மாநில ஊராட்சிகள் துறை அமைச்சர் சுப்ரதாமுகர்ஜி கடந்த ஆண்டு காலமானார். இதைபோன்று நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த சதன் பாண்டே கடந்த பிப்ரவரியில் இயற்கை எய்தினார். இந்த நிலையில் தொழில் , வணிகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் உட்பட நான்கு துறைகளுக்கு பொறுப்பு வகித்த மூத்த அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கில் கடந்த 23-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து பல்வேறு துறைகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி வசம் வந்தன.

இந்நிலையில் பணிகளை பகிர்ந்து அளிக்கும் வகையில் புதன்கிழமை அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று மம்தா நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 7 புதிய மாவட்டங்களை உருவாக்கி மாநிலத்தின் மொத்த  மாவட்டங்களின் எண்ணிக்கையை 30-தாக அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். திருணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மாற்றி இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்க மம்தா ஈடுபட்டிருப்பதாக கொல்கத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: