அமைச்சர் கைது எதிரொலி மம்தா அமைச்சரவை நாளை விரிவாக்கம்: புது முகங்களுக்கு வாய்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் தொழில்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சியில் அதிரடியாக மாற்றங்களை செய்ய முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள அவர் அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘அமைச்சரவையில் தலைமை இல்லாத பல்வேறு துறைகள் உள்ளன. அர்ப்பணிப்பு இல்லாத அமைச்சர்கள் கொண்ட துறைகள் இயங்கி வருகின்றது. இந்த அனைத்து துறைகளின் பொறுப்புக்களையும் என்னால் மட்டும் தனியாக ஏற்கமுடியாது. அமைச்சரவையில் 4 முதல் 5 புதிய அமைச்சர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள். புதன்று(நாளை) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: