ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதி வரை சமூக வலைதள ‘டிபி’யில் தேசியக்கொடி வையுங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாள் என்பதால், ஆகஸ்ட் 2  முதல் 15 வரை மூவர்ணக் கொடியை சமூக ஊடக தளங்களில் தங்கள் கணக்குகளின்  சுயவிவரப் படமாக (டிபி) வைக்கும்படி மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரையில் பேசியதாவது:

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ‘ஒவ்வொரு வீட்டிலும் மூர்வணக்கொடி’ ஏற்றுவதற்கான சிறப்பு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி (நாளை) தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாள் என்பதால், ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மூவர்ணக்கொடியை சமூக ஊடக தளங்களில் தங்கள் கணக்குகளில் வைக்கப்படும் சுயவிவரப் படமாக (டிபி) வைக்க வேண்டும்.

நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில், சுதந்திர தின திருவிழா ஒரு இயக்கமாக உருவெடுத்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​நாம் அனைவரும் ஒரு அற்புதமான மற்றும் வரலாற்று தருணத்தைக் காணப் போகிறோம். சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவைக் காண்பது தற்போதைய தலைமுறையின் அதிர்ஷ்டம். அடிமைச் சகாப்தத்தில் நாம் பிறந்திருந்தால், இந்நாளை எப்படிக் கற்பனை செய்திருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.2600 கோடிக்கு பொம்மைகள் ஏற்றுமதி

‘மன் கி பாத்’தில் மோடி பேசுகையில், ‘இந்திய பொம்மைத் துறை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியைப் பெற்றுள்ளது. ரூ.300-400 கோடியில் இருந்த இதன் ஏற்றுமதி, ரூ.2,600 கோடியாக உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் கொரோனா காலத்தில் நடந்தது,’ என்று தெரிவித்தார்.

Related Stories: