காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. காலிறுதியில் வங்கதேசத்துடன் நேற்று மோதிய இந்தியா 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. முதலில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் - சத்தியன் ஞானசேகரன் இணை 11-8, 11-6, 11-2 என்ற நேர் செட்களில் வங்கதேசத்தின் ராம்ஹிமிலியன் பாம் - அகமது ரிடாய் ஜோடியை வீழ்த்தியது.