முட்டை விலை ரூ.4 ஆக குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கடந்த ஒரு மாதமாக முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. என்இசிசி மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ், நேற்று முட்டை விலையில் மேலும் 20 காசுகள் குறைத்தார். இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைவு, ஆடி மாதம் என்பதால் முட்டை விற்பனை குறைந்துள்ளது போன்ற காரணங்களால், முட்டை விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: