வேல்ஸ் பல்கலை. பட்டமளிப்பு விழா; கவர்னர் ரவி பங்கேற்பு: வேந்தர் ஐசரி கணேஷ் தகவல்

சென்னை: சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வேலன் அரங்கில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி, மதியம் 12 மணிக்கு 12வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கிறார்.

கடந்தாண்டு வேல்ஸ் பல்கலைக்கழக 11வது பட்டமளிப்பு விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இந்த தகவலை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: