அப்போலோ கேன்சர் மையம் சார்பில் சர்கோமா புற்றுநோய் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி: இணைஆணையர், மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை: சென்னை தரமணியில் உள்ள அப்போலோ கேன்சர் மையம் சார்பில், சர்கோமா புற்றுநோய் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் வாழ்க்கை குறித்து நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணியை நேற்று காலை நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில்  துவங்கிய  இப்பேரணியை அப்போலோ மருத்துவமனை செயல் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகள் ஹர்ஷத் ரெட்டி, ஹரிஷ் திரிவேதி, டாக்டர் ராகேஷ் ஜலாலி, சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.வி. ரம்யாபாரதி ஐபிஎஸ்,  மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.  

இதில், சென்னை வடக்கு மன்டல இணைஆணையர் ஆர். பி. ரம்யாபாரதி ஐபிஎஸ் பேசுகையில், ‘‘சர்கோமா புற்றுநோய்  அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக சிகிச்சை பெற்றால் மட்டுமே இந்த நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். நாம் அனைவரும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து நோயற்ற வாழ்வை வாழ்வதே ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.’’ என பேசினார்.இப்பேரணியில், சோழிங்கநல்லூரில் உள்ள ஜே.எஸ். குளோபல் பள்ளி மற்றும் மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: