சட்டீஸ்கரில் காங். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கும், சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தேவுக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக மோதல் அதிகரித்துள்ளது. சமீபத்தில், பஞ்சாயத்து வளர்ச்சி துறைக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அந்த துறையின் பொறுப்பில் இருந்து சிங் தேவ் விலகினார். இவர்களின் மோதலை பாஜ தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சட்டப்பேரவையில் பாகல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடந்தது. இதில் பேசிய பாஜ எம்எல்ஏ பிரிஜ் மோகன் அகர்வால், ‘முதல்வருக்கு அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதேபோல், அரசு மீது அதிகாரிகளுக்கும் நம்பிக்கை இல்லை,’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பாகல் பதிலளித்தார். பின்னர், குரல் ஓட்டெடுப்பு மூலமாக இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

Related Stories: