காமன்வெல்த் விளையாட்டு தொடர் இங்கிலாந்தில் இன்று தொடக்கம்: 72 நாடுகளை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!!

பர்மிங்காம்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களின் ஒன்றான காமன்வெல்த் விளையாட்டு தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த 72 நாடுகளை ஒருங்கிணைத்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் விளையாட்டு தொடர் நடத்தப்படுகிறது.

அந்தவகையில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்க உள்ளது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 19 விளையாட்டுகளில் 215 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவின் தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள், நாடுகளின் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெற உள்ளது. காமன்வெல்த் விளையாட்டு தொடர் இன்று முதல் தொடங்கி  ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. 20 ஓவர் வடிவில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: