ராணுவத்துக்கு ஆயுதம் வாங்க ரூ.28,000 கோடி: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் கடந்த 2020ம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சீனாவின் அத்துமீறல், திடீர் தாக்குதல்களை முன் கூட்டணியே கண்டறிந்து எதிர்கொள்வதற்கான நவீன உபகரணங்களையும், நவீன ஆயுதங்களையும் வாங்க ராணுவ திட்டமிட்டது. அதன்படி, ரூ.28,732 கோடிக்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வாங்குவதற்கான பரிந்துரையை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ராணுவம் அளித்தது. அதன்படி, காடுகளை ஆளில்லாமல் கண்காணிக்கும் டிரோன்கள், நவீன துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தளவாடங்களை வாங்க திட்டமிடப்பட்டது. இந்த கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) நேற்று ஒப்புதல் அளித்தது.

Related Stories: