ஆற்றூரில் நள்ளிரவில் மலர்ந்த பிரம்ம கமலம் பூ

குலசேகரம் : உலகில் அரிய வகை மலர்கள் பல உள்ளன. அதில் ஒன்று ஆண்டுக்கு ஒருமுறை மலரும் பிரம்ம கமலம் செடி. கள்ளி வகையை சார்ந்த இது பெரும்பாலும் இமயமலை அடிவார பகுதிகளில் அதிகம் காணப்படும். பிரம்மனுக்கு உகந்த மலராக இது கருதப்படுகிறது. பூவின் நடுவில் பிரம்மன் படுத்திருப்பது போன்றும் நாகம் படமெடுப்பது போன்றும் காணப்படும். இளவேனில் காலத்தில் தென்மேற்கு பருவ மழை சீசனில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூக்கும் தன்மை கொண்டது. ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் பூக்கும் இதன் தளிர்களில் இரவு 8 மணியளவில் தோன்றும் மொட்டு இரவு 10 மணிக்கு மேல் விரிய ஆரம்பிக்கும்.

நள்ளிரவு 12 மணிக்கு முழுமையாக விரிந்து பிரகாசமாக காட்சியளிக்கும். அப்போது இதிலிருந்து தெய்வீக நறுமணம் வீசும். இதனால் இதனை இரவின் ராணி என்றும் அழைக்கின்றனர். அதன் பின்னர் நள்ளிரவை கடந்ததும் பூ சுருங்க ஆரம்பித்து விடியும் போது வாடி வதங்கி விடும். தெய்வீக தன்மை கொண்டது என்பதால் இது விரியும் போது இதனை வணங்கி செல்வர்.

இதேபோன்று ஆற்றூர் பகுதியை சேர்ந்த விவசாய காங்கிரஸ் மாநில துணை தலைவர் குமார் என்பர் வீட்டில் வளர்ந்து வந்த பிரம்ம கமலம் செடியில் நேற்று முன்தினம் இரவு இரவு 3 பூக்கள் மலர்ந்தது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Related Stories: