2 பஸ்கள் மோதி 8 பயணிகள் பலி: உத்தரப்பிரதேசத்தில் சோகம்

பாராபாங்கி: உத்தரப்பிரதேசத்தில் டபுள் டக்கர் பேருந்துகள் இரண்டு மோதிக்கொண்டதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். மேலும் 16 பேர் காயமடைந்தனர். பீகாரில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி இரண்டு டபுள் டக்கர் பேருந்துகள் சென்றுகொண்டிருந்தன. இதில் சுமார் 36 பேர் பயணம் செய்தனர். உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வே சாலையில் பாராபங்கி பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார் உடனடியாக விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் இறந்தவர்களுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். விபத்து குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘பாராபங்கியில் பேருந்து விபத்து சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளூர் நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’’ என்றார்.

Related Stories: