பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது பாலியல் வழக்குப்பதிவு

சேலம்: பெரியார் பல்கலைகழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் பொறுப்பு வகிக்கும் கோபி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியின் புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. சேலம் பெரியார் பல்கலைகழகம் தொடர்ந்து அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றுத்துறை தேர்வு வினாத்தாளில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியதோடு அதை எதிர்த்து பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் பெரியார் பல்கலைகழகத்தின் வேதியியல் துறை பேராசிரியராகவும், பெரியார் பல்கலைகழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகித்து வரும் கோபி மீது அங்கு வேதியியல் துறையில் ஆராய்ச்சி கல்வி பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக சேலம் மாநகர கருப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்தாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கோபி மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் கோபியும் தன்னை 3 பேர் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். எனவே பதிவாளர் புகாரின் பேரில் மாணவியின் உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெரியார் பல்கலைகழகத்தின் முறையான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் ஊழல் நிறைந்தவர்களை பதிவாளர்களாக நியமித்துள்ளனர் என்றும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி வரும் நிலையில் பதிவாளர் மீது அவரிடம் படித்த மாணவி ஒருவர் புகார் கொடுத்த சம்பவம்  சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: