தூத்துக்குடி டூரிங் டாக்கீஸ் தீ விபத்து திரைப்படமானது

சென்னை: கடந்த 1979ல் தூத்துக்குடியில் நடந்த டூரிங் டாக்கீஸ் தீ விபத்தில் 115 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த பின்பு, அந்த விபத்தில் இறந்தவர் ஆவியாக தியேட்டருக்குள் இருப்பதாக நீண்ட காலம் நம்பப்பட்டு வந்தது. இதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘மாயத்திரை’. காஸ்ட்யூம் டிசைனர் சாய் பாபு தயாரித்துள்ளார். அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன் நடித்துள்ளனர். தி.சம்பத்குமார் இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘தூத்துக்குடி டூரிங் டாக்கீஸ் தீ விபத்தையும், அது தொடர்பாக ஏற்பட்ட பயத்தையும் மையப்படுத்தி இயக்கியுள்ளேன். புளியங்குடி டூரிங் தியேட்டரில் படப்பிடிப்பு நடந்து. அந்த விபத்தில் இறந்தவர்களில் ஒரு காதல் ஜோடி இருந்தது. அதை வைத்து இப்படத்தை பேய் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளோம். பயமுறுத்தும் பேய் படங்களுக்கு மத்தியில், இதில் பேயின் காதல் மற்றும் தியாகம் சொல்லப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: