மீண்டும் வான்வெளியை ஆள வரும் ஆகாய கப்பல்: 2026 முதல் ஐரோப்பாவில் சேவையை தொடங்க திட்டம்..!

ஐரோப்பா: தொழில்நுட்ப சுழற்சி சக்கரத்தின் அடுத்தகட்டமாக 20ம் நூற்ராண்டின் தொடக்கத்தில் வான்வெளியை ஆண்ட ஆகாய கப்பல்கள் மீண்டும் வருகின்றன. உலகெங்கும் அதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்னும் 4 ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஆகாய கப்பல்கள் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

20 நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அற்புதமாக வர்ணிக்கப்பட்ட ஆகாய கப்பல்கள் வான்வெளியை ஆண்டன. ஆகாய மார்க்க பயணத்திற்கு மட்டுமின்றி முதல் உலகப்போரில் ஜெர்மனியால் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்ட ஆகாய கப்பல்கள் விமானங்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் வழக்கொழிந்து போயின. பூமி வெப்பமாதலாம் உலகம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதால் கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில் ஆகாய கப்பலுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. முந்தைய ஆகாய கப்பல்களின் சாதகமான அம்சங்களையும் தற்போது உள்ள தொழிநுட்பங்களையும் ஒருங்கிணைத்து hybrid air vehicles என்ற பிரிட்டிஷ் நிறுவனம் நவீன ஆகாய கப்பல்களின் தயாரிப்பை இந்த ஆண்டே முழு வீச்சில் தொடங்குகிறது.

ஆகாய கப்பலில் உள்ள காற்றறைகள் நிரப்பட்ட ஹீலியம் ஆகாய கப்பல் மேலெழும்பு உதவும். ஆகாய கப்பலில் பொருத்தப்பட்ட இரட்டை இன்ஜின்கள் அதனை முன்னோக்கி செலுத்தும். ஹீலியன் வாயுவால் மேலெழுவதால் விமானங்களுடன் ஒப்பிடுகையில் இதன் கார்பன் உமிழ்வு வெறும் 10% மட்டுமே. இதனால் இதன் வேகம் மிகவும் குறைவு. விமானங்களின் வேகம் மணிக்கு 804 கி.மீ. என்றால், இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. மட்டுமே அதிகபட்சம் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கலாம். 5 நாட்கள் பயணித்து அதிகபட்சம் 7,500 கி.மீ. தொலைவை கடக்கலாம். ஸ்பெயினை சேர்ந்த air nostrum என்ற நிறுவனம் ஆகாய கப்பல்களை வாங்கி 2026ம் ஆண்டில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் முழுக்க முழுக்க மின்சார இன்ஜினுக்கு மாறுவதால் கார்பன் உமிழ்வு அறவே இருக்காது என்று பிரிட்டிஷ் நிறுவனம் உறுதி கூறுகிறது.

இதேபோல் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமும் ஆகாய கப்பல் சந்தைக்கு குறி வைத்துள்ளது. முதல் கட்டமாக சரக்கு போக்குவரத்தையும், மக்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர் பயணிகள் சேவையையும் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தம்மை ஒழித்துக்கட்டி விமானங்களுக்கு போட்டியாக மீண்டும் முளைத்துள்ள ஆகாய கப்பல்கள் இனி வான்வெளியை ஆளுமா என்பதற்கு இந்த முயற்சிகளின் முடிவே பதில் தரும்.

Related Stories: