மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத்தை கனத்த இதயத்துடன் முதல்வராக்கினோம்!: பாஜக மாநில தலைவர் பேச்சால் சலசலப்பு

மும்பை: ஏக்நாத் ஷிண்டேவை பாஜக கனத்த இதயத்துடன் முதல்வராக்கியது என்று அம்மாநில பாஜக தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை கவித்தனர். இதனையடுத்து முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றனர். புதிய அரசு பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை பாஜக. கனத்த இதயத்துடன் முதல்வராக்கியது என்று அம்மாநில பாஜக சந்திரகாந்த் பாட்டீஸ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மும்பை அருகே பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேசுகையில், ‘ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக ஆக்குவதற்கு தேசிய தலைமையும் (பாஜக கட்சி), தேவேந்திர பட்னாவிசும் முடிவு  செய்தனர். இந்த முடிவால் நாங்கள் உண்மையில் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் முடிவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தோம். நிலையான அரசாங்கத்தை வழங்க வேண்டும் மற்றும் இதன் மூலம் ஒரு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அந்த வேதனையை நாங்கள் ஜீரணித்து, இப்போது மகிழ்ச்சியுடன் முன்னேறி வருகிறோம்’ என்றார். சந்திரகாந்த் பாட்டீலின் இந்த பேச்சு மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஆளும் கூட்டணிக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: