ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராம ஏரியை படகு துறை, பூங்காக்கள் அமைத்து சுற்றுலாத்தலமாக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமம் ஏரியை படகுத்துறை, பூங்காக்கள் அமைத்து சுற்றுலாத்தலமாக உருவாக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமம் உள்ளது. இங்கு பொதுப்பணி துறையின் சார்பில் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பெரிய அளவில் ஏலகிரி கிராமம் ஏரி உள்ளது. மேலும் இந்த ஏரி நிரம்பினால் சுற்றுப்பகுதியில் உள்ள 15 கிராமத்திற்கும் மேலான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பிய ஏரியானது.

இந்த வருடம் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையால் 2 முறையாக முழு கொள்ளளவை எட்டி கோடி விட்டுள்ளது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகில் உள்ள பொதுப்பணிதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏலகிரி கிராம ஏரியானது, ஏலகிரி கிராம ஏரிக்கு தண்ணீர்வரத்து பகுதியில் உள்ள பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழித்தடங்கள் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் லாரிஷெட் - பால்னாங்குப்பம் ஏரி இணைப்பு கால்வாய்கள் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி  தென்றல்நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாயத்தை தடுக்க வேண்டும். மேலும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் ஏரியில் நீர் நிரம்பி காணப்படும். மேலும் ஏலகிரிமலை சுற்றுலா தலம், ரயில் நிலையம் அருகில் உள்ளதால் ஏலகிரி கிராமம் ஏரிப் பகுதியில் “படகு சவாரி” மற்றும் “பூங்காக்கள்” அமைத்து சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக்கு வருமானமும், இங்குள்ள பகுதி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பொழுதுபோக்கு கூடமாக அமையும். எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: