கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கிவிட்டது: எஸ்.பி. பகலவன் பேட்டி..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கிவிட்டதாக எஸ்.பி. பகலவன் தெரிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைப்பெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காவலர்கள் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி, பள்ளி வாகனங்கள், மேஜை , நாற்காலி, மாணவர்களின் சான்றிதழ் ஆகியவற்றை தீ வைத்து எரித்தனர்.

இதுவரை வன்முறையில் ஈடுப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன், மாணவி உயிரிழப்பு தொடர்பாக வதந்திகள், போலியான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 32 வகையான யூ டியூப் பக்கங்கள், சமூக வலைதளப் பக்கங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. எத்தனை வலைதளப் பக்கங்கள் வதந்தி செய்திகளை பரப்பியுள்ளார்கள் என்பது குறித்து கணக்கெடுத்த பின்னர், வதந்தி பரப்பிய வலைதளப் பக்கங்களை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: