கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக திறப்பதற்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பெற்று வருகின்ற அம்புக்கோவில் நெல்கொள்முதல் நிலையம் மூலமாக அப்பகுதியை சேர்ந்த அம்புக்கோவில், மைலன், கோன்பட்டி, கறம்பவிடுதி, மருதன்கோன் விடுதி, போன்ற ஊராட்சிகளில் உள்ள அம்புக்கோவில் வட்டத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் பெரிதும் பயன் பெற்று வந்தனர்.

தற்போது இந்த விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல்லை குருவை சாகுபடி அறுவடை செய்து அம்புக்கோவில் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக கொட்டியுள்ளனர். தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் நிலைக்கு தள்ளப்படாமல் இந்த விவசாயிகள் அனைவரும் பயன் பெரும் வகையில் விவசாயிகளின் நலன் கருதி அம்புக்கோவில் கிராமத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக கொட்டியுள்ள நெல்லை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இதற்கு அம்புக்கோவில் நெல் கொள்முதல் நிலையத்தை ஏற்கனவே செயல்பட்டு வந்தது, போல் மீண்டும் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.

அம்புக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் தற்போது அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக கொட்டியுள்ள 10,000 நெல் மூட்டைகள் இருக்கும் என விசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: