ஊராட்சி தலைவர் கொலை வழக்கு 10 பேருக்கு குண்டாஸ்

பொன்னேரி: ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டக்கரை ஊராட்சியில் அதிமுகவை சேர்ந்த மனோகரன் (45) என்பவர் 2 முறை ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த மே 16ம் தேதி தொழில் போட்டி காரணமாக 10 பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டி கொன்றது. இப்புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை வழக்கில் கைதான வெள்ளிவாயல்சாவடி சுந்தரபாண்டியன் (43), அத்திப்பட்டு புதுநகர் பத்மநாபன் (35), தேனி மாவட்டம் அரவிந்த்குமார் (26), எண்ணூர் பாலாஜி (48), எர்ணாவூர் நாகராஜ் (29), ராஜேஷ் (23), ராஜ்குமார் (26). சௌந்தரபாண்டியன் (46), அன்னை சிவகாமி நகர் யுவராஜ் (25). பாலா (25) ஆகிய 10 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஆவடி ஆணையர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை 10 பேரையும் புழல் சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டனர்.

Related Stories: