பலாப்பழங்களை ருசிக்க குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உலா வரும் காட்டு யானைகள்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

குன்னூர் : பலாப்பழ சீசன் துவங்கியதால், அதனை ருசித்து பசியாறுவதற்காக, குன்னூர் மலைப் பாதையில் காட்டு யானை கூட்டம் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பலாமரங்கள் அதிகமாக உள்ளன. தற்போது சீசன் துவங்கியுள்ளது. இதனால், மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன.

சீசன் காலங்களில் பலாப்பழங்களை ருசித்து தின்று பசியாற வனத்தில் இருந்து யானை கூட்டம் வெளியேறும். அப்படி வெளியேறும் யானைகள் சாலைகளில் நடமாடுவது வழக்கம். அதன்படி, தற்போதும் பலா பழங்களை ருசித்து பசியாற 10-க்கும் மேற்பட்ட யானை கூட்டம் குன்னூர் மலைப்பாதை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

இந்த யானை கூட்டம் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடக்கிறது. இந்நிலையில், கேஎன்ஆர் அருகே புதுக்காடு பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று, சாலையை கடந்து சென்றது.இதனால், வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், செல்பி, வீடியோ எடுப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் குன்னூர் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: