லாஸ்வேகாஸ்: ஹாலிவுட் நடிகையும், பாடகியும், டான்சருமான ஜெனிபர் லோபஸ் (53), தன்னைவிட 3 வயது குறைந்த நடிகர் பென் அஃப்லெக் என்பவரை 4வது திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் கடந்த ஏப்ரலில் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. பென் அஃப்லெக்கும், ஜெனிபர் லோபஸும் 2002ல் முதல்முறை சந்தித்தனர். அப்போது ‘கிக்லி’ என்ற படத்தில் நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்த அவர்கள், 2004ல் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக்அப் செய்து பிரிந்தனர். இதையடுத்து நடிகர் ஒஜானி நோவா (1997-1998), டான்சர் கிறிஸ் ஜட் (2001-2003), பாடகர் மார்க் ஆண்டனி (2004-2014) ஆகியோரை ஜெனிபர் லோபஸ் அடுத்தடுத்து திருமணம் செய்தார்.