கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் : டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டியில்  நடைபெற்ற பூஸ்டர் தடுப்பூசி முகாமில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்றார். தமிழகமெங்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கும்மிடிப்பூண்டியில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளி முன் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிபாலன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், பேரூராட்சி துணை தலைவர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், நகர செயலாளர் அறிவழகன், பேரூராட்சி  கவுன்சிலர் அப்துல் ரஹீம், ராஜா, காளிதாஸ்  திமுக நிர்வாகள் ஆறுமுகம், இஸ்மாயில், குப்பன், அர்ஜுனன், ராகவரெட்டிமேடு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கும்மிடிப்பூண்டியில் 5 தொழிற்சாலைகள், 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 48 மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டதாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் கூறினார். இந்த முகாமில் 3031 பேர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசி போட முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர் முரளிகிருஷ்ணன், பேரூராட்சி பதிவறை எழுத்தர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: