காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட, நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் காந்தி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை  அருகில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் நகர தலைவர் நாதன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் வனிதா மகேந்திரன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஒவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா மதுராந்தகம் காந்தி சிலை அருகே நேற்று நடந்தது. இதில், மதுராந்தகம் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் கே.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், இதில், மாவட்ட துணை தலைவர் ஆர்.ஏ.ஆர்.கிறிஸ்டோபர் ஜெயபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட துணை தலைவர் ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் காந்திநகர் மணி, சேகர், வெங்கடேசன் ஜி.சுப்பிரமணி அயூப்கான், கே.சுப்ரமணி, சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனை  தொடர்ந்து,  காமராஜரை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பினர்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் காமராஜரின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் உள்ள தேசிய கொடி ஏற்றி கல்வி கண் திறந்த காமராஜர் குறித்து விளக்கவுரை ஆற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி, பேரூராட்சி துணை தலைவர் இந்திராணி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு துணை தலைவர் வரதன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories: