கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கூடுவாஞ்சேரி: கீரப்பக்கத்தில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில், பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வண்ணப்பூச்சு வேலை அனைத்தும் நடைபெற்று முடிந்து. இதனை தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீ தாயார் தும்பிக்கை ஆழ்வார் (கணபதி), ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ அனுமன் மற்றும் நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை நடந்தது. இதில் மேளதாளம், வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதில், கிராம பெரியோர்கள், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில், அனைவர் மீதும் கலசங்களில் இருந்து புனிதநீர் ஊற்றப்பட்டது. மேலும் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: