தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை; கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதையடுத்து நாளை கல்விநிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கேரளம் மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக கன மழை பெய்து வருகிறது.

அதேபோல கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் கலெக்டர் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (ஜூலை 15) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: