மேட்டுப்பாளையம் கல்லார் பழபண்ணையில் மங்குஸ்தான் பழங்கள் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு ஏலம்-பர்லியார் துரியன் பழ ஏலம் 15ம் தேதி குன்னூரில் நடக்கிறது

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பழப்பண்னை உள்ளது. இங்கு 205 மங்குஸ்தான் பழ மரங்கள் உள்ளன.

ஆண்டுதோறும் ஜூலை மாதம் பண்ணையில் மங்குஸ்தான் பழ சீசன் துவங்கும். இங்கு 205 மரங்கள் உள்ளன. இந்த பழங்கள் அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக மரங்கள் ஏலம் விடப்படும்.

இந்த ஆண்டு பருவமழை தவறி பெய்ததால்  205 மரங்களில் 83 மரங்களில் மட்டுமே மங்குஸ்தான் பழங்கள் காய்த்தன. இதனையடுத்து ஏலம் விட முடிவு செய்தனர். அதன்படி நேற்று நடந்த ஏலத்தில் 2.50 லட்சம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டது.இதேபோன்று குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில் மங்குஸ்தான் பழ மரங்கள் காய்த்துள்ளது. இது தவிர இங்கு 33 துரியன் பழ மரங்களும் காய்த்துள்ளது. இந்த பழங்களை அறுவடை செய்ய ஏலம் விட தமிழ்நாடு தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏலம் வரும் நாளை (14ம் தேதி) குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் உள்ள உதவி தோட்டக்கலை துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவமும் நாளை காலை முதல் மாலை வரை வழங்கப்பட உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவம் பெற்று 15ம் தேதி நடக்கும் ஏலத்தில் கலந்து கொள்ள தோட்டக்கலைத் துறை மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பர்லியார் பழப்பண்ணையில் 75 ஆயிரம் பாக்கு மர நாற்றுகளும், 50 ஆயிரம் பன்னீர் ஒன்று ரக குரு மிளகு நாற்றுக்கள், ஜாதிக்காய் பட்டை கிராம்பு நாற்றுக்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. தேவைப்படுவோர் பர்லியார் பழப்பண்ணை நேரில் அணுகி வாங்கிச் செல்லலாம். இந்த தகவலை பர்லியார் பண்ணை மேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: