தனுஷ்கோடியில் கடல் சீற்றம் இருப்பதால்; 40 அடிக்கு மேலாக ஆக்ரோஷத்துடன் கடல் அலைகள்

தனுஷ்கோடி: தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றமாக இருப்பதால்  40 அடிக்கு மேலாக ஆக்ரோஷத்துடன் கடல் அலைகள் இருந்தன. தென்மேற்கு பருவக்காற்று சீசன் தொடங்குவதால் கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றமடைந்து தனுஷ்கோடி சாலை வரை தடுப்புகளை தண்டி கடல் அலை வருகின்றது. தனுஷ்கோடியில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றமாக  உள்ளதால் சத்திரம் துறைமுகம் பழத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமக மேலே எழுப்புகிறது.

மேலும் மணல் காற்றும் அதிகமாக வீசுவதால் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதன் இடையே ஆக்ரோஷத்துடன் கடல் அருகே சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Stories: