விடுமுறை தினத்தையொட்டி பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள்-விசைப்படகில் சென்று உற்சாகம்

இடைப்பாடி : பூலாம்பட்டியில் விடுமுறை தினத்தையொட்டி திரண்ட சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை ஆகிய நீர்மின் கதவணை வழியாக திருச்சி, தஞ்சாவூர் செல்கிறது. முன்னதாக பூலாம்பட்டி நீர்மின் தவணையில் கடல்போல் தண்ணி தேக்கப்படுவதால் விசைப்படகு போக்குவரத்து நடக்கிறது.

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று, சேலம் மற்றும் இடைப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, அதிகளவில் சுற்றுலா பயணிகள் காலை முதலே குடும்பம், குடும்பமாக திரண்டனர். அங்குள்ள மாட்டுக்கார பெருமாள் கோயிலில் வழிபட்டு, பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர், விசைப்படகில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையின் வழியாக இருகரைகளை தொட்டபடி 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நுங்கும், நுரையுமாக சென்றது கண்கொள்ள காட்சியாக இருந்தது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர். திரளான சுற்றுலா பயணிகள் வந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளை பூலாம்பட்டி போலீசார்

மேற்கொண்டனர். 

Related Stories: