என் திருமணத்தில் ஜனங்களுக்குதான் ரொம்ப அக்கறை... சோனாக்‌ஷி சலிப்பு

மும்பை: பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா, தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு 35 வயது முடிந்து, 36வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால், இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், அவரது திருமணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாவது வழக்கம். அதாவது, சில பாலிவுட் ஹீரோக்களுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகும். இதை அவர் மறுப்பார். இந்நிலையில், சோனாக்‌ஷி சின்ஹா அளித்துள்ள பேட்டி வருமாறு: என் திருமணம் குறித்து தெரிந்துகொள்ள பலர் ஆர்வம் காட்டுகின்றனர். நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை மக்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். வேறெந்த புது விஷயமும் இல்லை. என் திருமணம் குறித்து ஊடகங்களும், மக்களும்தான் அதிகமாக கேட்கின்றனர். காரணம், என்மீது அவர்களுக்கு அவ்வளவு அக்கறை. இதுவரை என் பெற்றோர் கூட என் திருமணம் குறித்து எதுவும் கேட்டதில்லை.

Related Stories: