காஞ்சிபுரத்தில் மாவட்ட சிலம்ப போட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று அசத்தினர். காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பு விளையாட்டு கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் சிலம்பு விளையாட்டுக்கு அங்கீகாரம் அளித்து 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டியில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், ஒற்றைக்கம்பு மற்றும் இரட்டை கம்பு பிரிவின் கீழ், 5 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம் மற்றும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிலம்பு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினர். இந்நிகழ்வில், நகர செயலாளர் கே.ஆறுமுகம், மாநகராட்சி உறுப்பினர்கள் சுரேஷ், சந்துரு மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரும் பரிசுகளை வழங்கினர்.

Related Stories: