திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை: 6 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குலசேகரம்: கும்பாபிஷேகம்  நடைபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேற்று காலை தங்க  கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து மாலையில் கொடியேற்றத்துடன் 6 நாள் திருவிழா தொடங்கியது.குமரி  மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், 418  ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று (9ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6  மணிக்கு சிறப்பு பூஜை, 72  அடி உயர தங்க கொடிமர பிரதிஷ்டை நடைபெற்றது. பகல் 12  மணிக்கு உச்ச பூஜை, அபிஷேகம், அன்னதானம் நடந்தது.

கொடிமரம் பிரதிஷ்டை  செய்யப்பட்டதையடுத்து 6 நாள் திருவிழா ேநற்று முதல் தொடங்கியது. இதற்காக நேற்று மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது.  கொடிமரத்தில் கருடன் உருவம் பதிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அதனைதொடர்ந்து  லட்ச தீபம் ஏற்றப்பட்டது. வருகிற 14ம் தேதி வரை பூஜைகள், காலை  மற்றும் மாலையில் ஸ்ரீபூதபலி எழுந்தருளல் என திருவிழா கோலாகலமாக நடைபெற  உள்ளது.

Related Stories: