இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா?.. பதவி விலக வேண்டுமென அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்..!

கொழும்பு: மக்கள் புரச்சி வெடித்ததை அடுத்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபாய ராஜபக்சே ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கோத்தபய - ரணில் சிக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி மக்கள் மீண்டும் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இதற்கிடையே நேற்றிரவு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு திடீரென வாபஸ் பெற்றதால் பதற்றம் நிலவி வருகிறது. மக்களின் போராட்டம் தீவிரமடையும் என உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து நேற்று இரவே அதிபர் மாளிகையை விட்டு குடும்பத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தப்பிய நிலையில் இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை கப்பலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சொந்தமான பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதாக கூறப்பட்டது. கோத்தபய பதவி விலக வேண்டுமென இலங்கை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் கோத்தபய பதவி விலகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. பதவி விலகும் கோரிக்கை பற்றி அனைத்துகி கட்சி கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதிபர் அறிக்கையால் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: