பாண்டியார் டேன்டீ பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பை சேதம் செய்த காட்டு யானை

பந்தலூர் :  பந்தலூர் அருகே தேயிலைத்தோட்டம் பாண்டியார் 4பி பகுதியில் தொழிலாளர் குடியிருப்பை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர்  சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு  நாட்களாக தேவாலா அட்டி  பகுதியில் குடியிருப்புகளை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகள் நேற்று இரவு அரசு செயலைத் தோட்டம் பாண்டியா 4பி பகுதியில் நுழைந்தன. பின்னர்  யானைகள் தொழிலாளி புவனேஸ்வரி என்பவரின் வீட்டை உடைத்து சேதம் செய்தன.

வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். யானைகள்  நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டன. அதன்பின் தொழிலாளர்கள் யானையை விரட்டினர். சம்பவம் குறித்து தொழிலாளர்கள் டேன்டீ நிறுவாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: