கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல்

கோவை: கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் விதிமுறைகள், தேர்தல் நடத்தும் வழிமுறைகள், போட்டியிடும் முறைகள், பிரசாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து விளக்குவதற்காக இந்த மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பள்ளிக்கான மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டுத்துறை, உணவுத்துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய 5 துறைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில், பள்ளியின் மாணவர்கள் 138 பேர், ஆசிரியர்கள் 6 பேர், பள்ளியின் தாளாளர் ஒருவர், வட்டார கல்வி அலுவலர் ஒருவர், பிஆர்டிஇ அலுவலர் ஒருவர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் 276 பேர் என 413 பேர் பள்ளிக்கு வந்து வாக்களித்தனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 11ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி பிரமாணம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், தேர்தலை முன்னிட்டு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

Related Stories: