ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மனிதனின் அனைத்து எலும்புகளுடன் கிடைத்த முதுமக்கள் தாழி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட 2 முதுமக்கள் தாழிகளில் மனிதனின் அனைத்து எலும்புகளும் கிடைத்திருக்கிறது. இது கடந்த 8 மாதங்களாக ஒன்றிய தொல்லியல் துறை நடத்திவரும் அகழாய்வில் இதுவரை 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்கிடைத்த முதுமக்கள் தாழிகளில் ஒன்று அல்லது 2 எலும்புகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 முதுமக்கள் தாழிகளில் தலை, தாடை, பல், கை, கால், முதுகெலும்புகள் கிடைத்திருக்கிறது.

இவற்றில் உள்ள பற்கள் மரபணு பகுப்பாய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன. கடந்த வாரம் தங்கத்தால் ஆன காதணி, சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட தரைத்தளம், சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் ஆதிச்சநல்லூரிலேயே காட்சிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.      

Related Stories: