கோத்தகிரியில் துவங்கியது சீசன் நாவல்பழங்களை தின்பதற்கு படையெடுக்கும் கரடிகள்-தொழிலாளர், பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கோத்தகிரி :  கோத்தகிரியில் நாவல்பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனால் தேயிலைத்தோட்டங்களில் கரடிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. கரடியால் தேயிலை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆடத்தொரை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, அரவேனு, மூனுரோடு, அளக்கரை, கெங்கரை, கூட்டடா  பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளன. தோட்டங்கள் மற்றம் சாலை ஓரங்களில் நாவல்பழ மரங்கள் அதிக அளவில் உள்ளன.

தற்போது நாவல்பழ சீசன் தொடங்கியுள்ளது. நாவல் பழங்கள் கரடிக்கு மிகவும் பிடித்த உணவு. இதனால் அவைகளை தின்பதற்காக இரவு, பகல் என்று பாராமல் தேயிலை தோட்டங்களில் கரடிகள் படையெடுத்து வருகின்றன. கரடிகள் நடமாட்டத்தால் தேயிலை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தோட்டம் மற்றும் சாலையில் செல்வோர் மிகுந்த கவனமாக செல்லுமாறும், கரடிகள் குடியிருப்புகளுக்குள் புகுந்தால்  உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: