பைக் திருட்டு 4 பேர் கைது

சென்னை: சென்னை ராயபுரம் தங்க சாலை, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தோர் ஸ்ரீதர் (20), பயாஸ் (29), அசாருதீன் (28), ராஜசேகரன் (29). இவர்கள் 4 பேரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இதனையடுத்து, போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் 9 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் ராய் தலைமையிலான  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: