ஒரே ஓவரில் 35 ரன்! பும்ரா உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டின் 2வது நாளான நேற்று இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 375 ரன் எடுத்திருந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு கேப்டன் பும்ரா - சிராஜ் இணை சேர்ந்தனர். 84வது ஓவரை ஸ்டூவர்ட் பிராடு வீசினார். அதனை எதிர்கொண்ட பும்ரா...

* முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

* 2வது பந்து ஒய்டாக அமைந்ததுடன், பைஸ் வகையில் பவுண்டரியும் கிடைக்க உதிரியாக 5 ரன்.

* மீண்டும் வீசிய 2வது பந்து நோ பால். பும்ரா அதை சிக்சருக்கு பறக்கவிட்டதால் 6+1 ரன்.

* 3வது முறையாக வீசப்பட்ட 2வது பந்தில் பவுண்டரி.

* 3வது பந்தில் மேலும் ஒரு பவுண்டரி.

* 4வது பந்தில் பும்ரா ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தல்.

* 5வது பந்தில் சிக்சர்.

* 6வது பந்தில் ஒரு ரன்... என ஒரே ஓவரில் 35 ரன் கிடைத்தது டெஸ்ட் வரலாற்றில் புதிய உலக சாதனையாக அமைந்தது. இதற்கு முன்பு 2003ல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்டில் பீட்டர்சன் (தெ.ஆப்.) வீசிய ஓவரில் பிரையன் லாரா (வெ.இண்டீஸ்), 2013ல் பெர்த்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கி.) வீசிய ஓவரில்  பெய்லி (ஆஸி.), 2020ல் போர்ட் எலிசபத்தில் கேசவ் மகராஜ் (தெ.ஆப்.) வீசிய ஓவரில் ஜோ ரூட் (இங்கி.) ஆகியோர் தலா 28 ரன் எடுத்ததே அதிக பட்சமாக இருந்தது.

* சிராஜ் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் பும்ரா இன்னும் கொஞ்ச நேரம் வாணவேடிக்கை நடத்தியிருக்கக் கூடும். பும்ரா நேற்று ஆட்டமிழக்காமல் 31* ரன் (16 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்தார். இது இந்தியாவின் முதல் இன்னிங்சில் 4வது அதிகபட்ச ரன்னாகும். ரிஷப் 146, ஜடேஜா 104 ரன்னுடன் முதல் 2 இடங்களை பிடிக்க, உதிரிகள் மூலம் கிடைத்த 40 ரன் 3வது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

Related Stories: