வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்களுக்கு 23% வரை ஊதிய உயர்வு; அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் பணியாளர்கள்  கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வினை தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி 1.1.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. சங்கங்களின் வகைப்பாட்டிற்கேற்ப 23 சதவீதம் வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.2,259ம், அதிகபட்சமாக ரூ.14,815ம் ஊதிய உயர்வு கிடைக்கும். 1,675 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: