காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம், தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 9ம் தேதி நடைபெறயுள்ளது. இதையோட்டி நேற்று திமுக தேர்தல் அலுவல திறப்பு விழா நடந்தது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்புராயனை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தனர். முன்னதாக, அப்பகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகத்தையும் எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், நகர செயலாளர் கே.ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி, மண்டல குழு தலைவர்கள் சந்துரு, செவிலிமேடு மோகன், சாந்தி சீனிவாசன், சசிகலா கணேஷ், மாமன்ற உறுப்பினர்கள் மல்லிகா ராமகிருஷ்ணன், சுரேஷ், கமலக்கண்ணன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: