தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பூங்கொத்து கொடுத்து யஷ்வந்த் சின்ஹாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். திமுக, தோழமை கட்சிகளிடம் ஆதரவு கோருவதற்கான சென்னை வருகை தந்துள்ளார்.

Related Stories: