கலைஞரின் 99 வது பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டி: திருவள்ளூர் வீரர்கள் சாதனை

திருவள்ளூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு எடை பிரிவுகளில் இருபாலருக்கான குத்துச்சண்டை போட்டியில் 200 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இப்போட்டியில் திருவள்ளூர் அடுத்த திருவூரில் செயல்பட்டு வரும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர்.

இதில் 32 - 36 கிலோ எடைப்பிரிவில் தர்ஷன்ஸ்ரீ, 60 - 62 கிலோ எடைப்பிரிவில் தமிழ்மாறன், 67 - 70 எடைப்பிரிவில் விக்னேஷ், 70 - 74 எடைப்பிரிவில் திருமாறன் ஆகிய 4 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர்.அதேபோல், 70 - 72 எடைப்பிரிவில் திவாகர் வெள்ளிப்பதக்கமும், 74 - 77 எடைப்பிரிவில் மாதேஷ் குமார், 28 - 30 எடைப்பிரிவில் கலையரசன் , 26 - 28 எடைப்பிரிவில் கவியரசன் , 30 - 32 எடைப்பிரிவில் ராகுல், 34 - 36 எடைப்பிரிவில் ஜஸ்வந்த விஷ்ணு ஆகிய 5 பேர் வெண்கலப்பதக்கங்கள் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன், குத்துச்சண்டை பயிற்சி மையத்தின் நிர்வாகி இளவரசன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: