ஆவடி திமுக அலுவலகத்தில் உள்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு, மேற்கு, கிழக்கு, பூவிருந்தவல்லி கிழக்கு, மேற்கு, எல்லாபுரம் மத்திய, வில்லிவாக்கம் ஆகிய ஒன்றியங்களில் திமுகவின் 15-வது உள்கட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று காலை வேட்புமனுக்கள் வழங்கப்பட்டன. பின்னர் நேற்று மாலை தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

 கட்சி தேர்தல் ஆணையர் பார்.இளங்கோவன் முன்னிலையில், ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் தாக்கல் செய்தனர். இதன் ஒரு பகுதியாக, பூவிருந்தவல்லி மேற்கு பகுதியில் கடந்த 10 வருடங்களாக ஒன்றிய செயலாளராக இருந்த டி.தேசிங், பூவிருந்தவல்லி கிழக்கில் புதிதாக போட்டியிடும் கமலேஷ் ஆகியோர் வேட்பு மனுவை பூர்த்தி செய்து, அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில், தேர்தல் ஆணையரிடம் வேட்பு மனுக்களை வழங்கினர்.

Related Stories: