திருவேற்காடு நகராட்சியில் ரூ. 2.17 கோடியில் சாலை, குளம் தூர்வாரும் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 2 இடங்களில் நேற்று ரூ. 2.17 கோடி மதிப்பில் சாலை பணிகள் மற்றும் பட்டா குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று துவக்கிவைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட ராஜாங்குப்பம் பகுதியில் 50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, 1.67 கோடி மதிப்பில் மேல்அயனம்பாக்கத்தில் பட்டா குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவேற்காடு நகர்மன்றத் தலைவர் என்இகே.மூர்த்தி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று, சாலை மற்றும் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். அப்போது பொக்லைன் இயந்திரத்தை இயக்கி, தானே குளத்தை தூர்வாரும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்.

இதில் நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: