நீதிபதிகள் மகிழும் வகையில் அறநிலையத்துறை பணிகள் கூடுதல் வேகம் பெறும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: நீதிபதிகள் மகிழும் வகையில் அறநிலையத்துறை பணிகள் கூடுதல் வேகம் பெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். சென்னை வளசரவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோயில் குளத்தை ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வளரசவாக்கம் கோயில் குளத்தை ரூ.84 லட்சம் செலவில் சென்னை மாநகராட்சி சீரமைத்து வருகிறது. கோயில் குளங்களை சுற்றி ஒட்டுமொத்த இடத்தையும் சேர்த்துதான் சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

வளசரவாக்கம் கோயில் குளம் சீரமைப்புக்கான வரைபடம் ஜூலை 10ம் தேதி வெளியிடப்படும். அறநிலையத்துறை குறித்து நேற்று நீதிபதிகளின் தீர்ப்பை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு வேகமாக செயல்படுவோம். நீதிபதிகளே மகிழ்ச்சி அடையும் வகையில் அறநிலையத்துறை வேகமாக செயல்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்காமல் அறநிலையத்துறை தூங்கிக்கொண்டு இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Related Stories: