மதுரையில் போலீசார் அதிரடி கஞ்சா விற்ற தம்பதியின் ரூ.5.50 கோடி சொத்து முடக்கம்

மதுரை:  மதுரை, ஒத்தக்கடையில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் குடியிருப்பில் 170 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக முனிச்சாலை பகுதியை சேர்ந்த காளை, இவரது மனைவி பெருமாயி மற்றும் பேரையூர் அருகே கம்மாளபட்டியை சேர்ந்த அய்யர் ஆகிய 3 பேரை போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒத்தக்கடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கஞ்சா வழக்கில் கைதான மூவர் மற்றும் இவர்களது உறவினர்களின் வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கணக்கெடுத்து முடக்கம் செய்தனர். இதன்படி மதுரையில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டடி மனைகள், முனிச்சாலை மற்றும் ஏராளமான விவசாய நிலங்கள் உட்பட ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: