அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்காது: வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சை: வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது. நடந்த பொதுக்குழுவிற்கு பிறகு ஓபிஎஸ்  செல்வாக்கு உயர்ந்துள்ளது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி:

தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பொதுக்குழுவிற்கு பிறகு ஓபிஎஸ்சின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. பொதுக்குழுவுக்கு பிறகு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு போகும் முன்பு,  பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத 600 பேர் முன்னால் அமர்ந்து விட்டார்கள். அவர்கள் தான் கூச்சல் போட்டனர். உறுப்பினர்கள் யாரும் எந்த வார்த்தையும் பேசவில்லை.

அவர்கள் கொண்டுவந்த பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லாத ஆட்களே அந்த நிகழ்வு நடப்பதற்கு காரணம். அவர்கள் பொதுக்குழுவை நடத்தவில்லை. ஒரு கட்சியின் ஜனநாயகத்திற்கு புறம்பாக கண்ணியம், கட்டுப்பாடு, கடமை எதுவும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்தினார்கள். அங்கு போன பொதுக்குழு உறுப்பினர்கள் தற்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். வருகிற 11ம் தேதி பொதுக்குழு நடக்காது என்றார்.

Related Stories: