நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: எடப்பாடியின் பொதுச் செயலாளர் கனவு கானல் நீரானது; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை என உத்தரவிடப்பட்டது. தீர்மான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டனர். அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

நீதிபதிகளின் தீர்ப்பு எதிரொலியாக ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்துக் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபம் முன்பு ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆள் 7உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கும் பழனிசாமியை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை தன்வசப்படுத்திய பழனிசாமிக்கு ஒற்றை தலைமை கனவானது கானல் நீராக மாறி உள்ளது. தனித்தீர்மானத்திற்கு தடை விதிக்கப்பட்டதால்,  பொதுச் செயலாளர் கனவுக்கு தற்போது முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

Related Stories: